கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய மனு

குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் தொங்கு பால விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட கோரி வக்கீல் விஷால் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பழமையான தொங்கு பாலங்கள் தொடர்பாக விரிவான பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளவும், தொங்கு பால விபத்துகள் தொடர்பாக நிரந்தர பேரிடர் விசாரணை குழுவை உருவாக்கவும் இந்த பொதுநல மனுவில் கோரியுள்ளார்.

இந்த பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் விஷால் திவாரி, தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார். முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, குஜராத் தொங்கு பால விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனுவை நவம்பர் 14-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து