தேசிய செய்திகள்

2 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவை - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருத்தம்

கடந்த 25 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருத்தம் தெரிவித்தார்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற அரசு விழா ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கெண்டார்.

அந்த விழாவில் அவர் பேசுகையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரம் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில் இதுவரை 4 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் சுமார் 1500 விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடங்கள் நவம்பர் இறுதிக்குள் அல்லது டிசம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் லட்சக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நீதித்துறை இக்கட்டான சூழலில் உள்ளன. நிலுவையில் மொத்தம் உள்ள 90 லட்சம் சிவில் வழக்குகளுக்கு 20 லட்சம் வழக்குகளுக்கு இன்னும் சம்மன் அனுப்பப்படவில்லை. அதுபோல நிலுவையில் உள்ள 2.1 கோடி கிரிமினல் வழக்குகளில் 1 கோடி வழக்குகளுக்கு இன்னும் சம்மன் அனுப்பப்படவில்லை என்று வேதனை தெரிவித்த தலைமை நீதிபதி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை