ராய்ப்பூர்,
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்த ஆய்வுக்கூட்டத்தைத் தொடர்ந்து, சத்தீஷ்காரில் 30.2 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. இது தேசிய சராசரி விகிதமான 6.3 சதவீதத்தை விட மிகவும் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சத்தீஷ்கார் மாநில பொதுமக்கள் தொடர்புத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சத்தீஷ்காரில் அதிகமான தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்ற மத்திய அரசின் தகவல் தவறானது என்றும் உண்மையில், மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் வெறும் 0.81 சதவீதமும், மாநில அரசால் நேரடியாக வாங்கப்பட்ட தடுப்பூசிகளில் 0.63 சதவீதமும் மட்டுமே வீணாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.