தேசிய செய்திகள்

உத்தரபிரதேச தேர்தல்; 200 துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்தார் மந்திரி அஜய் மிஸ்ரா!

விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்ட வாக்குச் சாவடியில் இருந்து 200 பாதுகாப்பு படையினர் சூழ மந்திரி அஜய் மிஸ்ரா வெளியேறிய வீடியோ வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த நிலையில்,உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறைய விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும் அந்த சம்பவ இடத்தில் மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்துள்ளார். எனவே, அவரை முக்கிய குற்றவாளியாக கூறி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆஷிஸ் மிஸ்ராவுக்கு, கோர்ட்டு ஜாமீன் வழங்கி கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. மேலும், உள்ளூர் வாக்காளர்களின் பின்னடைவைத் தவிர்க்க, அவரை முக்கிய அரசியல் நிகழ்வுகளில் இருந்து கட்சி ஒதுக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேர்தலில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா டெனி லக்கிம்பூர் கேரியின் பன்பீர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர் வாக்குச் சாவடியில் இருந்து 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை பாதுகாப்புடன் பத்திரமாக வெளியேறினார். இந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு