தேசிய செய்திகள்

அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை: சன்னி வக்பு வாரியம் அமைத்தது

அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை ஒன்றை சன்னி வக்பு வாரியம் அமைத்தது.

தினத்தந்தி

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அயோத்தியில் தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கிக் கொடுத்தது.

அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்பார்வையிட சன்னி வக்பு வாரியம் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளது. இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர் சுபர் அகமது பரூக்கி நேற்று அறிவித்தார்.

அவர் அறக்கட்டளையின் தலைவராகவும், தலைமை அறங்காவலராகவும் செயல்படுவார். 15 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். மசூதியுடன் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், நூலகம், ஆஸ்பத்திரி ஆகியவையும் கட்டப்பட உள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்