தேசிய செய்திகள்

பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்?

தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பலர் கட்சித்தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்

ஐதராபாத்,

முதல்மந்திரி சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 8 எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு அணி தாவ திட்டமிட்டு உள்ள நிலையில், மொத்த எம்.எல்.ஏ.க்களில் 3ல் 2 பங்குக்கும் அதிகமானோர் தற்போது டி.ஆர்.எஸ். கட்சிக்கு வர இருப்பதாக சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.ஏ.வுமான கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்து உள்ளார்.

சந்திரசேகர் ராவின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதை பார்த்து காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் கட்சிக்கு வர இருப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரம் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாற திட்டமிட்டு இருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்