தேசிய செய்திகள்

ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநிலம் ஜெகனாபாத் ரெயில் நிலையம் அருகே பாட்னா நோக்கி பாலமு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண், 4 குழந்தைகளுடன் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அந்த பெண் மற்றும் 3 குழந்தைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

போலீசார் விசாரணையில், 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண், 6 முதல் 12 வயது வரையிலான தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்