தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தொழிலாளி சாவு

புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் பஞ்சிகுட்டே பகுதியை சேர்ந்தவர் ரகுநாத் ஷெட்டி(வயது 53). கூலி தொழிலாளி. இவரது மகன் அனுஷ். இந்த நிலையில் அனுஷ் பெங்களூருவுக்கு செல்ல இருந்தார். இதனால் ரகுநாத், அவரை மோட்டார் சைக்கிளில் பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார்.

அப்போது அவர் புத்தூர் அருகே வந்தபோது, எதிரே புத்தூர் போக்குவரத்து போலீஸ்காரர் வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரகுநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அனுஷ் பலத்த காயம் அடைந்தார்.

இந்த நிலையில் போலீஸ்காரர் ஷீனப்பா என்பவர் தவறான பாதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை