போபால்,
மத்திய பிரதேச மாநிலம் கன்னோத்தில் காவல் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஏடிஎம் இயந்திரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளது. இன்று அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சி செய்து உள்ளனர், இதில் தோல்வியடையவே அவர்கள் மொத்தமாக ஏடிஎம்மையே எடுத்துச் சென்றுவிட்டனர். ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 12 லட்சம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏடிஎம் மையத்தில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர் டீ குடிக்க அதிகாலையில் சென்ற போது கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது, இதனையடுத்து பாதுகாவலர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி அதிகாரிகள் தரப்பில் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 12 லட்சம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.