தேசிய செய்திகள்

தீவிரவாத தாக்குதல்; பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச போலீசார் ரூ.7.5 கோடி நிதியுதவி

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.7.5 கோடியை மத்திய பிரதேச போலீசார் நிதி உதவியாக வழங்கி உள்ளனர்.

தினத்தந்தி

போபால்,

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த வாரம் தற்கொலை தாக்குதல் நடத்தினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் அலுவலகத்தில் அவரை சந்தித்து மாநில டி.ஜி.பி. வி.கே. சிங் ரூ.7.5 கோடிக்கான காசோலையை நிதியுதவியாக இன்று வழங்கினார். போலீசார் தங்களது மாத வருவாயில் இருந்து நிதியை திரட்டி நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

இந்த நிதியானது காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவியாக வழங்கப்படும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து