தேசிய செய்திகள்

டீசல் திருட்டு; 3 ஊழியர்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த லாரி உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

டீசல் திருடி விட்டனர் என கூறி ஊழியர்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தினத்தந்தி

ஜபல்பூர்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் லாரி உரிமையாளராக இருப்பவர் குட்டு சர்மா. இவரது உதவியாளர் ஷேரு (வயது 40). குட்டுவிடம் சுரேஷ் கோண்டு (வயது 46), ஆஷிஷ் கோண்டு (வயது 24) மற்றும் கோலு கோண்டு (வயது 23) ஆகிய 3 பேர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். பழங்குடியினத்தினை சேர்ந்த அவர்கள் லாரி ஓட்டுநர்களாகவும் மற்றும் கிளீனர்களாகவும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 11ந்தேதி இரவு தனது லாரிகளில் இருந்து 120 லிட்டர் டீசலை திருடி விட்டனர் என 3 பேர் மீதும் குட்டு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த 3 பேரின் உடைகளையும் உதவியாளர் ஷேரு உதவியுடன் களைய செய்துள்ளார். அதன்பின்னர் அவர்கள் 3 பேரையும் கடையின் கதவை மூடிவிட்டு அதனை நோக்கியபடி நிற்க வைத்துள்ளார்.

அவர்களை பேஸ்பால் பேட் மற்றும் பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றை கொண்டு 2 பேரும் அடித்து உள்ளனர்.

இதுபற்றி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து