விதிஷா,
மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் சுஜா கிராமத்தில் வசித்து வருபவர் ஜஸ்வந்த் ஆஹிர்வார். தொழிலாளியான இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இவரது மனைவி பபிதா ஆஹிர்வார் (வயது 23). கர்ப்பிணியான இவர் விதிஷா மாவட்ட மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு கடந்த சனிக்கிழமை ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை 3.3 கிலோ எடையுடன், ஒட்டிய நிலையில் 2 தலைகள், 3 கைகள் மற்றும் 4 உள்ளங்கைகளுடன் இருந்துள்ளது. அதற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நிலைமை மோசமடையவே, போபாலில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். இந்த தம்பதிக்கு முதல் குழந்தையே உடல் கோளாறுகளுடன் பிறந்து இருப்பது அவர்களுக்கு அதிக வருத்தம் ஏற்படுத்தி உள்ளது.