தேசிய செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகம் சேர்ப்பு

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி நிதின் கட்காரி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரம்புக்குள் சேர்க்கப்படாமல் மொத்த, சில்லரை வர்த்தகங்கள் விடுபட்டு இருந்தன. இந்தநிலையில், திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மொத்த, சில்லரை வர்த்தகங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப மொத்த, சில்லரை வர்த்தகங்களுக்கு முன்னுரிமை துறைக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வர்த்தகர்கள் 2 கோடிபேர் பலனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிறு, குறு நடுத்தர தொழில்துறையின் கீழ் சில்லரை, மொத்த விற்பனை வணிகள் பதிவு செய்து கொள்ளலாம். திருத்தப்பட்ட விதிகளின்படி Udaym Registration portal -ல் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை