மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவி வருகிறது. மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்த போதும் கூட இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.
இந்தநிலையில் தாராவியில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாட்டுங்கா லேபர் கேம்ப், முகுந்த் நகர், தாராவி குறுக்கு சாலை கல்யாண் வாடி, சாஸ்திரி நகர், சோனா நகர் மற்றும் ஆசாத் நகர் ஆகிய இடங்களில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது.
மக்கள் அடர்த்தி மிகுந்த தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது, அங்கு வசிக்கும் மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.