தேசிய செய்திகள்

பெண் அரசு அதிகாரிகளை மிரட்டி படுக்கைக்கு அழைத்து 35 ஆபாச வீடியோக்கள்...! பா.ஜனதா தலைவரின் லீலைகள்

பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர் அரசு பெண் அதிகாரிகள் என்பதுதான்.

மும்பை,

பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குறித்த ஆபாச வீடியோக்கள் மராத்தி செய்தி சேனலில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வீடியோ இரண்டு வீடியோ இல்லை. மொத்தம் 35 வீடியோக்கள். இதன் மொத்த நீளம் 8 மணி நேரம். திகைக்க வைக்கும் இந்த ஆபாச வீடியோ விவகாரம் ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது

இதுதெடர்பாக கிரித் சோமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்து உள்ளன.

இந்தநிலையில் கிரித் சோமையா, "தான் எந்த பெண்ணையும் துன்புறுத்தவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "கிரித் சோமையா மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என்று உறுதி அளித்திருந்தார்.

பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர் அரசு பெண் அதிகாரிகள் என்பதுதான்.

அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு நிறுவனங்களை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் அதிகாரிகளை பா.ஜனதா தலைவர் சோமையா மிரட்டி, தன்னுடைய பாலியல் ஆசைக்கு அடிபணிய வைத்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

சோமையா பல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் இதுபோல் மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்