தேசிய செய்திகள்

மும்பை போலீசார் 93 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 9,657

மராட்டியத்தில் மும்பை போலீசார் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. நாட்டில், 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மந்திரியின் இல்லத்தில் தங்கி உள்ளவர்களுக்கு மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில், மந்திரி திலீப்பின் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மராட்டியத்தில் மும்பை போலீசார் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்நகரில் மொத்தம் 9,657 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு