மும்பை,
தொலைபேசி ஒட்டு கேட்பு - தரவுகள் கசிந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இயக்குநரும்,மராட்டிய காவல்துறையின் முன்னாள் டிஜிபியுமான சுபோத் ஜெய்ஸ்வாலுக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளனர்.
வரும் 14 ஆம் தேதி மும்பை போலீசின் சைபர் பிரிவு முன்பாக ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மின்னஞ்சல் மூலமாக இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காவல்துறையில் போலீசாரின் பணி இட மாறுதல்களில் ஊழல் நடப்பதாக ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி சுக்லா தயாரித்த அறிக்கை கசிந்தது தொடர்பான வழக்கில்தான் சிபிஐ இயக்குநருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏனனில், சுபோத் ஜெய்ஸ்வால் அந்த சமயத்தில் டிஜிபியாக பதவி வகித்து வந்தார்.