தேசிய செய்திகள்

மும்பை: 23-வது மாடியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

மும்பையில் 23-வது மாடியில் வீட்டிலேயே இருந்த ஜிம்மின் பால்கனியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் சாந்தி கமல் பகுதியில் சிஞ்ச்பொக்லி ரெயில் நிலையம் அருகே, அடுக்குமாடி குடியிருப்பில் பராஸ் பொர்வால் (வயது 57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார்.

இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் கட்டிடத்தின் 23-வது மாடியில் இருந்த பராஸ், கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பராஸின் வீட்டிலேயே அமைக்கப்பட்டு இருந்த ஜிம்மில் இருந்து தற்கொலை செய்வதற்கு முன்பு, அவர் எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்றை கண்டெடுத்தனர்.

அதில், தனது தற்கொலைக்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை என்றும், அதனால் யாரிடமும் விசாரணை நடத்தப்பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பராஸின் உடல் கீழே கிடந்தபோது, அந்த வழியே சென்றவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

இதன்பின்னரே வந்த போலீசார் உடலை கைப்பற்றி நகர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் பரிசோதனையும் நடந்து வருகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு