மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் 1993ம் ஆண்டு மார்ச் 12ந்தேதி திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனால் நகரமே குலுங்கின. இந்த சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சலீம் காஜி. நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீலின் நெருங்கிய உதவியாளராக இருந்து வந்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சலீம், இந்தியாவில்இருந்து தப்பி பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சலீமுக்கு கடந்த சில நாட்கனாக, உடல்நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
அவர் இருதயம் சார்ந்த பாதிப்புகளால் இன்று உயிரிழந்து உள்ளார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த யூசுப் மேமன் கடந்த ஆண்டு நாசிக் மத்திய சிறையில் உயிரிழந்து உள்ளார். மற்றொரு தேடப்படும் குற்றவாளியான முஸ்தபா தோசா கடந்த 2017ம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.