தேசிய செய்திகள்

மராட்டிய ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர்கள் சந்தித்து பேசினர்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை.

தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி வருகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில், மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர்கள் ராம்தாஸ் காதம் மற்றும் சஞ்செய் ராவத் ஆகியோர் சந்தித்து பேசினர். மராட்டிய அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் சிவசேனா தலைவர்கள் விளக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்