image courtesy: ANI 
தேசிய செய்திகள்

மும்பை: 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை மேற்கு கன்டிவாலி பகுதியில் உள்ள எட்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று நண்பகல் 12:30 மணியளவில் திடீரென கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தீயானது மளமளவென மேல் தளங்களுக்கு பரவியது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது