தேசிய செய்திகள்

யோகா வகுப்பு நடத்தி பெண்களிடம் சில்மிஷம் வசமாக சிக்கி கொண்ட யோகா ஆசிரியர்

மராட்டிய மாநிலம் மும்பையில் யோகா வகுப்பு நடத்தி வரும் யோகா குரு தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்

மும்பை

மும்பை சேவ்ரி பகுதியில் ஷிவ்ராம் ராவத் ( 57 வயது) என்பவர் யோகா வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். ஞாயிறுதோறும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார் அப்போது ஒரு பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால் மோட்சம் கிட்டும் என்று கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் ஆர்.ஏ.கே.மார்க் காவல் நிலையத்தில் கடந்த வாரம் இந்தப் புகாரை அளித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று இரவு வதாலாவில் அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

புகார் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும் போது கடந்த 6 ஆண்டுகளாக இவர் யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். பெண்களை தொடர்ந்து அவர் இவ்வாறு துன்புறுத்தி வருகிறார்.

நாங்கள் புகார் கொடுத்த பிறகு பாதிக்கப்பட்ட மேலும் 3-4 பெண்களும் இதே போல் புகார் கொடுக்க முன் வந்துள்ளனர் என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்