தேசிய செய்திகள்

தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று

மும்பை தாரவி பகுதியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஒற்றை இலக்க எண்களிலே கொரோனா தொற்று பதிவாகி வருவதே இதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது. மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் மராட்டிய அரசு, தனது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தாராவியில் இன்று , புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,540 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 98 பேர் மட்டும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் சனிக்கிழமை நிலவரப்படி, கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் விகிதம் 0.37 சதவிகிதமாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது