ஐதராபாத்,
ஒரு ஆண், ஒரு பெண் என்ற அந்த இரட்டையர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த இருவரையும் அவர்களது தாய்மாமன் ஐதராபாத்தில் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அழைத்துவந்தார். அங்கு அருகில் இருந்தவர்களிடம் இந்த குழந்தைகள் அதன் பெற்றோருக்கு வேதனையை அளிப்பதாகவும், அவர்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாவதாகவும் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு அவர் அந்த 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடல்களை ஒரு காரில் ஏற்றியபோது அந்த வீட்டின் உரிமையாளர் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து குழந்தைகளின் தாய்மாமனையும், கார் டிரைவரையும் கைது செய்தனர். குழந்தைகள் உரிமை தொண்டு நிறுவனத்தினர், இந்த கொலை பற்றி அந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரியும், எனவே அவர்களையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.