தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியகம் - மத்திய பிரதேச முதல்-மந்திரி அறிவிப்பு

லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில், அவர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

போபால்,

மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், நேற்று போபாலில் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் இடம்பெறும் அருங்காட்சியகமும், மியூசிக் அகாடமியும் நிறுவப்படும் என்றும் கூறினார்.

மேலும், லதா மங்கேஷ்கர் பெயரில் இந்தூரில் கல்லூரி அமைக்கப்படும் என்றும், அவர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார். இந்தூரில் லதா மங்கேஷ்கர் சிலை நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை