அதன்படி நேற்று நாடு முழுவதும் இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிரிதி இரானி, பூபிந்தர் யாதவ் ஆகியோர், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்கள் பலரும், முத்தலாக் தடை சட்டம் காண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இரானி, முஸ்லிம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய சிறுபான்மை நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர் துறை அமைச்சகங்கள் இணைந்து பல்வேறு வசதிகளை வழங்கும் என தெரிவித்தார்.