தேசிய செய்திகள்

2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என்றார். மேலும், தேர்தலுக்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும் என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு