தேசிய செய்திகள்

‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டம், கடந்த மாதம் 21-ந் தேதி 3-வது முறையாக பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, கேரளாவை சேர்ந்த ஒரு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை