தேசிய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா பதவி ஏற்பு: மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து

நானும், சக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று பதவி ஏற்று கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிறைவு செய்துள்ளார். இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் சோனியா காந்தி.

நானும், சக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம்.அவரது துணிச்சலும், கண்ணியமும், எழுச்சியும் நமது நாடாளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும்.அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT