தேசிய செய்திகள்

'பாட்டிதான் என் பலமே' - இந்திரா காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி டுவீட்

டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

என் பாட்டி(இந்திரா காந்தி)தான் என் பலம். நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்த இந்தியாவை நான் எப்போதும் பாதுகாப்பேன். உங்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடன் என் இதயத்தில் இருக்கின்றன' என்று பதிவிட்டு அவர் குறித்த ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு