தேசிய செய்திகள்

மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும்: மந்திரி எஸ்.டி.சோமசேகர்

மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறியுள்ளார்.

எளிமையான தசரா

கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் கேரளா, மராட்டியத்தில் இருந்து வருபவர்களால் கர்நாடகத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மைசூரு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டுமா?. என்று தெரியவில்லை. தசரா விழாவை கொண்டாடுவது குறித்து வரும்நாட்களில் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் தசரா விழா குறித்து ஆலோசனை நடத்தி ஆனாலும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும். தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது பற்றியும் முடிவு எடுக்கப்படும்.

அனுமதிக்க கூடாது

கடந்த ஆண்டு தசரா விழா கொண்டாடியதற்கு ஆன செலவு போக ரூ.2.91 கோடி பாக்கி உள்ளது. அந்த பணத்தை வைத்து இந்த ஆண்டு தசரா கொண்டாடப்படும். கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க முன்எச்சாக்கை நடவடிக்கை எடுக்கப்படும். எச்.டி.கோட்டை அருகே உள்ள பாவலி சோதனை சாவடியில் பணம் வாங்கி கொண்டு கேரளா வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் யார் பணம் வாங்கினர் என்று தெரியவில்லை. பணம் வாங்கியவர்கள் யார் என்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார். கொரோனா நெகட்டிவ் அறிக்கையுடன் வராதவர்களை எக்காரணம் கொண்டும் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பாக மக்கள் பணி செய்கிறார். இதில் சந்தேகம் வேண்டாம். அவர் 2 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக தொடருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு