சண்டிகர்,
நாட்டை காக்கும் பணியில் தங்களது உயிரை தியாகம் செய்தவர்களை கவுரவிக்கும் வகையிலான கொள்கையை பஞ்சாப் அரசு கொண்டுள்ளது. இதுபற்றி பஞ்சாப் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டை காக்கும் பணியில் தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு எப்பொழுதும் கடன்பட்டிருக்கிறது.
அதனால் அவர்களது நினைவை என்றும் பாதுகாக்க வேண்டியது நமது உயரிய கடமையாகிறது. அவர்களுக்கு உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என பள்ளி கல்வி மந்திரி விஜய் இந்தர் சிங்லா கூறியுள்ளார் என்று தெரிவித்து உள்ளது.
இதன்படி, பதன்கோட் மாவட்டத்தில் உள்ள இரு அரசு பள்ளிகள், தார்ன் தரன், பதின்டா மற்றும் பாட்டியாலா ஆகிய மாவட்டங்களில் உள்ள தலா ஒரு அரசு பள்ளிகள் என மொத்தம் 5 பள்ளி கூடங்களின் பெயர்களை மாற்றி வீரர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.