தேசிய செய்திகள்

மராட்டியம்: விசாரணைக்கு நேரில் வருமாறு நாராயண் ரானாவுக்கு நாசிக் போலீஸ் நோட்டீஸ்

உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக வழக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருமாறு எம்.பி. நாராயண் ரானாவுக்கு நாசிக் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே குறித்து பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. நாராயண் ரானே சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதையடுத்து, மத்திய மந்திரி நாராயண் ரானே மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாராயண் ரானே நேற்று மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய மந்திரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட நாராயண் ரானே ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று இரவு விசாரணை மேற்கொண்ட கோர்ட்டு மத்திய மந்திரி நாராயண் ரானேவுக்கு பிணையில் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மராட்டிய முதல்-மந்திரி குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக தொடரப்பட்ட பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருமாறு எம்.பி. நாராயண் ரானாவுக்கு நாசிக் போலீஸ் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் செப்டம்பர் 2-ம் தேதி நாசிக்கில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு வருமாறு நாராயண் ரானாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்