தேசிய செய்திகள்

நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் -ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாவட்டம் வயநாட்டில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தை நம்புவதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

ஒவ்வொரு மனிதரும் தங்களது சொந்த நம்பிக்கையைப் பின்பற்றுவது பற்றிய மகாத்மா காந்தியின் கருத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் வலிமை என்னவென்று அவருக்கு தெரியாத அளவுக்கு அவர் மனம் கோபத்தால் நிறைந்துள்ளது.

நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிரதமர் மோடி தான் கோட்சேவை நம்புவதாகக் கூற தைரியம் இல்லை என்று கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை