தேசிய செய்திகள்

‘கோட்சே ஒரு பயங்கரவாதி’ - மெகபூபா கருத்து

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பயங்கரவாதி என மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பயங்கரவாதி என பேசினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் பிரக்யா சிங், கோட்சே தேச பக்தர் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியுமான மெகபூபா முப்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலையை நியாயப்படுத்துவதன் மூலம், அவரை பா.ஜ.க. அவமானப்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை