தேசிய செய்திகள்

பிரதமர் மோடி காட்டும் வழியில் தேசம் செல்லும்: பா.ஜனதா தலைவர்கள்

பிரதமர் மோடி காட்டும் வழியில் தேசம் செல்லும் என்று பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே வானொலியில் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மாநில அரசுகள் திறமையாக செயல்படுகின்றன. முக கவசம் அணிவது ஒரு பழக்கம் ஆக ஏற்பட வேண்டும். ஒரு நபர் முக கவசம் அணிந்திருக்கிறார் என்றால் அவருக்கு உடல்நலம் பாதிப்பு என்று பொருள் கிடையாது. அது புத்திசாலித்தன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார். மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போர் வீரராக செயல்பட்டு போராடி வருகிறார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது டுவிட்டரில், இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயில் நம்முடைய போர் வீரர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் தேசத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வை காட்டியுள்ளனர். அவர்கள் ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று நமது பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு covidwarriors.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராட தனிமனிதர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது வாய்ப்பை வழங்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இதே போல் மத்திய-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிமுறைகளைப் பின்பற்ற மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். உறுதியாக பிரதமர் மோடி காட்டிய வழியில் இந்த தேசம் செல்லும். மக்கள் ஒழுக்கத்துடன் நடந்தால் கொரோனா பாதிப்பு குறைந்து அகன்றுவிடும் என்பதைத்தான் பிரதமர் மோடி மக்களிடம் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான மக்கள் நடத்தும் போர் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு