தேசிய செய்திகள்

டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்...! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 22% குறைந்துள்ளன..!!

பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பான நகரமாக மாறி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 22 சதவீதம் குறைந்துள்ளன என்று டெல்லி காவல்துறையின் புள்ளி விவரங்கள் காட்டுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி:

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து உள்ளன. முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020 ஆம் ஆண்டில் 2,111 ஆக குறைந்துள்ளன (செப்டம்பர் 15 வரை) என டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களில் கூறப்பட்டு உள்ளதாவது:-

டெல்லி 2020 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை பெண்களுக்கு எதிரான 7,236 குற்றங்களை பதிவு செய்யபபட்டு உள்ளது. இது 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 22.58 சதவீதம் குறைந்துள்ளது (9,347 வழக்குகள்).

செப்டம்பர் நடுப்பகுதி வரை, மொத்தம் 1,132 கற்பழிப்பு வழக்குகள் (ஐபிசி பிரிவு 376) 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் பதிவு செய்யப்பட்டன. இது 2019 ல் 1,613 ஆக இருந்தது, இந்த வழக்குகள் 29.8 சதவீதம் குறைந்துள்ளது.

இதேபோல், பெண்களை அடக்கும் நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வழக்குகள் (ஐபிசி பிரிவு 354) 2019 ல் 2,116 ஆக இருந்து 2020 ல் 1,374 ஆக குறைந்து உள்ளது, இது சுமார் 35 சதவீதம் குறைந்து உள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் ஐபிசி பிரிவு 509 பெண்ணை அவமானப்படுத்தும் வழக்குகள் 312 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில், இந்த பிரிவின் கீழ் 333 வழக்குகள் பதிவாகியுள்ளன, 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,374 ஆக உயர்ந்து உள்ளது.

வரதட்சணை தொடர்பான 89 வழக்குகள் (ஐபிசி பிரிவு 304 பி மற்றும் வரதட்சணை தடை சட்டம்) இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 15 வரை பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 107 ஆக இருந்தது, இது 16.8 சதவீதம் குறைந்து உள்ளன. இதேபோல், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் 2019 ல் 2,731 வழக்குகளில் இருந்து 2020 ல் 1,917 ஆக குறைந்து உள்ளது.

குற்றங்கள் 2019 2020 பாலியல் பலாத்காரம் (IPC Sec 376) 1613 1132 பெண்களை அடக்கும் நோக்கத்துடன் தாக்குதல்(IPC Sec 354) 2116 1374 பெணளை அவமானப்படுத்துதல் (IPC Sec 509) 333 1374 கடத்தல் 2731 1917 கணவர் மாமியார் கொடுமை (IPC Sec 498A/406) 2447 1432 வரதட்சணை கொடுமை பலி (IPC Sec 304B) 94 82 வரதட்சணை கொடுமை (IPC Sec 304B) 13 7

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை