தேசிய செய்திகள்

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் இல்லை: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் இல்லை என முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

அசாம் மாநிலத்தில் 1951-க்கு பிறகு சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரித்து வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பட்டியலில் 19 லட்சம் பேரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்கு பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாட்னாவில் நேற்று, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பீகாரில் அமல்படுத்தப்படுமா? என பா.ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், அந்த மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், எதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு? அதெல்லாம் அமல்படுத்தப்பட மாட்டாது என பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை