தேசிய செய்திகள்

'கியூட்' நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (கியூட்) 2 கட்டங்களாக நடத்தப்படும்.

தினத்தந்தி

சென்னை:

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடந்தது.

அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 2 ஷிப்டுகளில் தேர்வு நடக்கிறது. இதில் முதல் 'ஷிப்ட்'டில் நடந்த தேர்வில், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள சில மையங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும், மேலும் பிற்பகலில் 2-வது ஷிப்ட்டில் (3 மணி முதல் 6 மணி வரை) நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.

இவற்றில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகிற 12-ந்தேதியும், ரத்து செய்யப்பட்ட தேர்வு 12 மற்றும் 14-ந்தேதிக்கு இடைபட்ட நாட்களிலும் நடத்தப்படும் என்றும், இந்த தேர்வர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால்டிக்கெட்டை கொண்டு இந்த தேர்வை எழுத முடியும் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து