புதுடெல்லி,
ஹாக்கிப் போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்த தயான் சந்தின் பிறந்த தினமான இன்று( ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
தயான் சந்த், சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி 400க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். 1928ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தயான் சந்த் அடித்த 14 கோல்கள் மூலம், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியா விருது, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடபடுவதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், தேசிய விளையாட்டு தினத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர் மேஜர் தியார் சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம். ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வணக்கம். அவர்களின் கடின உழைப்பால் தான் நாம் பல்வேறு மைல்கற்களை எட்டிபிடிக்க முடிந்தது. விளையாட்டு துறை சகோதரர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக உள்ளது. ஆசிய விளயைட்டு போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டியிலும் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்காற்றி உள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.