தேசிய செய்திகள்

நதிகளை மாசுபடுத்தியற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நதிகளை மாசுபடுத்தியற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம்((Jhelum)), ரவி((Ravi)), பியாஸ்((Beas)), சட்லஜ்((Satluj)) ஆகிய நான்கு நதிகளுடன், செனாப்((Chenab)) நதியும் பாய்வதால், ஐந்து நதிகளின் நிலம் என்ற பொருள் கொள்ளும் வகையில், பஞ்சாப் என அம்மாநிலம் பெயர்பெற்றது.

இதில், பியாஸ், சட்லஜ் ஆகிய ஆறுகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதிகளவில் மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த ஆறுகளை சுத்தப்படுத்த பஞ்சாப் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டது. மேலும், இந்த ஆறுகளை சுத்தப்படுத்த பஞ்சாப் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், பஞ்சாப் அரசுக்கு அபராத தொகையாக ரூ.50 கோடி விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தொகையை 2 வாரத்திற்குள் பஞ்சாப் அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை