புதுடெல்லி,
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 40 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்துவருகிறது. இதுதொடர்பான வழக்கு டெல்லியிலுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ, 5-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.