image courtesy: ANI 
தேசிய செய்திகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்- இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி ரெட்னோ மர்சூடியை இன்று சந்தித்தார்.

தினத்தந்தி

ஜகார்த்தா,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி ரெட்னோ மர்சூடியை ஜகார்த்தாவில் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தோனேசியாவின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மந்திரி முகமது மஹ்புத் உடன் இரண்டாவது இந்தியா-இந்தோனேசியா பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார், பாதுகாப்பு மற்றும் சைபர் போன்ற பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்