தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது - பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டி

தேசியவாத காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார்.

புதுடெல்லி,

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. கட்சியின் செல்வாக்கான தொகுதியான பாரமதியில் சரத்பவாரின் மகளும், மூத்த தலைவருமான சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். வடகிழக்கு மும்பை தொகுதியில் சஞ்சய் தினா பாட்டீல் உள்பட 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்த ஸ்வாபிமனி சேத்கரி சங்தானா கட்சியின் தலைவர் ராஜூ சேத்தி பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...