மும்பை,
மும்பை காமராட்டி புரா பகுதியில் உள்ள கடை முன்பு நவநிர்மாண் சேனா கட்சியின் விளம்பரம் வைக்க கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் விளம்பரத்தை கண்டு தனது ஆட்சேபனை தெரிவித்தார். அங்கு வந்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர் வினோத் உள்பட 3 பேர் அங்கு வந்து ஆட்சபனை தெரிவித்த பெண்ணை பிடித்து கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விட்டனர்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ காட்சி ஒன்று வைரலாக பரவி வந்தது. இது பற்றி அறிந்த நாக்பாடா போலீசார் நடத்திய விசாரணையில் கட்சி பிரமுகர் வினோத் உள்பட அவரது ஆதரவாளர்களான ராஜூ அர்கில், சதீஷ் லாட் ஆகிய 3 பேர் சேர்ந்து பொது இடத்தில் பெண்ணை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.