மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதை உள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள நெருக்கடியை களைவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் முதற்கட்ட பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த புதிய விமான நிலையத்தில் இணையான இரு ஓடுபாதைகள் அமைய பெறும். ஒரு மணிநேரத்திற்கு 80 விமானங்களின் போக்குவரத்து இருக்கும்.
இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பேசிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரு கட்டங்களாக விமான நிலையம் உருவாகும். முதற்கட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு முனைய கட்டிடம் மற்றும் ஓடுபாதை ஒன்று வருகிற 2019ம் ஆண்டு டிசம்பரில் முழுமை பெறும் என கூறியுள்ளார். இந்த முனைய கட்டிடம் 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது.