அமிர்தசரஸ்,
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து கடந்த 11-ம் தேதி தனது ஆலோசகராக இரண்டு பேரை நியமித்தார். ஒருவர் முன்னாள் ஆசிரியர் மற்றும் அரசியல் ஆலோசகரான மல்விந்தர் சிங் மாலி, மற்றொருவர் பாபா பரித் பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் மற்றும் அறிவியல் பிரிவின் முன்னாள் பதிவாளர் பியாரே லால் கார்க்.கடந்த வாரம் மல்விந்தர் சிங் மாலி தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த கருத்தில், 'இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளன' எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மல்விந்தர் சிங் மாலி தனது பதவியிலிருந்து விலகினார். மாலி தனது பேஸ்புக் பதிவில், நான் எந்தப் பொறுப்பையும் ஏற்காதபோது ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.