தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி; ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றார் சித்து

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார்.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாபில் அமரிந்தர் சிங் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியதையடுத்து, புதிய முதல் மந்திரியாக சரன்ஜித் சிங் சன்னி காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டார். புதிய மந்திரி சபையில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கும் முதல் மந்திரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், கோபம் அடைந்த சித்து, காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். எனினும், காங்கிரஸ் மேலிடம் இந்த ராஜினாமாவை ஏற்கவில்லை. சித்துவே காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று கட்சி மேலிடம் கூறியிருந்தது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை திரும்பப் பெறுவதாக சித்து இன்று அறிவித்துள்ளார். இது குறித்து சித்து கூறுகையில், எனது ராஜினாமா கடிதத்தை நான் திரும்பப் பெற்றுள்ளேன். புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படும் நாளில் புதிய குழுவும் அமைக்கப்படும் என்று நான் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். எனது பொறுப்பை நான் ஏற்க இருக்கிறேன். எனக்கு தனிப்பட்ட ஈகோ எதுவும் கிடையாது என்றார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வரும் சலசலப்புகள் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை