தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது ஆகும். அதன்படி இந்த ஆண்டு வரும் 16ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவம் வீதி உலாக்களுடனும், பக்தர்களுடனும் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணியளவில், இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்