தேசிய செய்திகள்

கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி கீழே குதித்து உயிர் தப்பினார்

கடற்படை விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானி கீழே குதித்து உயிர் தப்பினார்.

தினத்தந்தி

பனாஜி,

கோவா மாநிலம் வாஸ்கோவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை தளத்தில் இருந்து நேற்று வழக்கமான பயிற்சிக்காக மிக்-29கே ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அது, ஒற்றை இருக்கையும், இரட்டை என்ஜினும் கொண்ட விமானம் ஆகும். நடுவானில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம், அரபிக்கடலை ஒட்டிய கோவா கடலோர பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானி, கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கடற்படை செய்தித்தொடர்பாளர் கூறினார்.

கோவா மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில் நடக்கும் 2-வது மிக் ரக விமான விபத்து இதுவாகும்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்